தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சூப்பர்ஸ்டார்..!

rajini fans meet speech

தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் இனிய நிகழ்வை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினி துவங்கி வைத்தார். இந்தநிகழ்வில் தன்னை வைத்து 25 படங்களை இயக்கிய தனது ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமனையும் மேடையேற்றி கௌரவித்தார்.

மேலும் மேடையில் சுமார் 20 நிமிடங்கள் பேசிய ரஜினி, அரசியல் பிரவேசம், இலங்கை பயணம் ரத்து செய்தது என தன்னைப்பற்றி வெளியான விமர்சனங்களுக்கு நாகரிகமாக நாசூக்காக பதிலடி கொடுத்தார். முடிவாக தான் ஒருவேளை அரசியலில் நுழைந்தால், தன்னை வைத்து அரசியலில் ஆதாயம் அடையலாம், பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கு தன்னிடம் இடமில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவிட்டார் ரஜினி.