மெர்க்குரி படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு..!

Mercury Team (8)

கடந்த வெள்ளியன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து இயக்கிய ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியானது. சைலண்ட் த்ரில்லராக, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்த இந்தப்படம், தமிழக திரைத்துறையின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் முதல்படமாக வெளியானது.

பொதுவாக முக்கியமான படங்கள் வெளியாகும்பொது ரஜினி அந்தப்படங்களை பார்த்துவிட்டு கருத்துச்சொல்வார். அதிலும் இது அடுத்தததாக தன்னை வைத்து இயக்கப்போகும் கார்த்திக் சுப்பராஜ் படம்.. அதனால் இந்தப்படத்தையும் ரஜினிகாந்த் பார்த்தார்.

பார்த்துவிட்டு “பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, மியூசிக், ஸ்டன்ட் எல்லாமே எக்ஸலெண்ட், டெக்னிக்கலி ப்ரில்லியண்ட், மொத்தத்தில் சூப்பர் படம்” என படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.