ஏமாற்றம் தரும் காவிரி தீர்ப்பு ; ரஜினி-கமல் கருத்து..!

kamal - rajini

இன்று காவிரியில் தண்ணீர் பங்கீடு குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள் ரஜினியும் கமலும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்கள்.

தீர்ப்பில் எனக்கு ஏமாற்றம்தான். நீரின் அளவு குறைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் தான். நான் பத்தாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் குரங்காக இருந்த காலத்திலேயே காவிரி ஓடியது. அதனால் காவிரிக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறியிருந்தேன்.

அதையே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பாக கூறியுள்ளது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் தற்போது தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைவாக கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்தவேண்டியது தமிழர்களின் கடமை. அதைவிட முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. அது இரு மாநிலங்களுக்கான ஒற்றுமை.

நிலத்தடி நீரை அதிகரிக்கும் வேலையை அனைவரும் செய்வோம். காவிரி நீரைப் பெறுவதில் சண்டைபோடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் அதை பேசித்தான் பெற வேண்டும்.’ என கமல் கூறியுள்ளார்.

“காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.