ஃபாக்ஸ் ஸ்டாரின் ‘ராஜதந்திரம்’ பலிக்குமா..?

 

சதுரங்க வேட்டை டைப்பில் களவு மோசடி இவற்றை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ராஜதந்திரம்’. வீரா, ரெஜினா, அஜய் பிரசாத் உட்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.. ஏ.ஜி.அமித் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ஆறு முக்கியமான கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதமாக வெளியான ஆறு டீசர்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ் மற்றும் சன்லேன்ட் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு இயக்குனர் கௌதம் மேனன் தான்  கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.. ராஜா ராணி, குக்கூ, மான் கராத்தே படங்களை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுகிறது. படத்தை மார்ச் துவக்கத்தில் வெளியிட தீர்மானித்துள்ளார்கள்..