‘ரங்குஸ்கி’யிடம் நெருங்க பயந்து 19 டேக் வாங்கிய ‘ராஜா’

‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களை தொடர்ந்து தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. ‘மெட்ரோ’ பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி ‘ரங்குஸ்கி’ கேரக்டரில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர இரண்டு முக்கிய போலீஸ் அதிகாரிகளாக கல்லூரி வினோத் மற்றும் சத்யா இருவரும் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் செப்-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சிகள் ஸ்னீக் பீக்காக வெளியிடப்பட்டது. இரண்டு காட்சிகளும் இந்தப்படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என எதிர்பார்ப்பை தூண்டவே செய்கிறது. ஒரு கொலையும் மற்றும் அது தொடர்பான விசாரணையும் தான் படத்தின் கதைக்களம் என படக்குழுவினர் கூறினர்.

இதில் போலீஸ் கான்ஸ்டபிளாக சிரிஷ் நடித்துள்ளார். படத்தில் இவருக்கும் நாயகி சாந்தினிக்கும் ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. ஆனால் சாந்தினி தனது நீண்டநாள் நண்பர் என்பதால் அவருக்கு முத்தம் கொடுக்க தடுமாறி, இக்காட்சியில் நடிக்கும் போது 19 டேக் வாங்கினாராம் நாயகன் சிரிஷ்.

சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.