8 மணி நேரத்தில் ஒரு பாடலை உருவாக்கி முடித்த ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி..!

ar-rahman_vairamuthu_maniratnam-combo

மணிரத்னம் டைரக்சன் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார்.. இவர்கள் இருவர் கூட்டணி என்றால் வைரமுத்து கட்டாயம் உடனிருப்பார்.. இது எழுதப்படாத விதி. தற்போது கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் மட்டும் இந்த கூட்டணி களைகட்டாமல் போய்விடுமா என்ன..?

அப்படித்தான் சமீபத்தில் காதலின் பிரிவையும் வலியையும் சொலும் பாடல் ஒன்றை உருவாகக் மூவரும் 4 மணிக்கு ஒன்று கூடினார்களாம். 6 மணிக்கு மெட்டு இறுதியானதாம். 8 மணிக்கு பாட்டு உறுதியானதாம்.. 12 மணிக்கு பாடல் ஒலிப்பதிவே முடிந்துவிட்டதாம். ‘அன்பே நான் அலைபோல எழுந்தாலும் வீழ்ந்தாலும் உன் பேரை கூவுகின்றேன்” என்கிற அந்த பட்டால் படத்தின் மிக முக்கியமான பாடலாக இருக்குமாம்.