‘கதாயுதம்’ ஏந்தும் ரகுமான்-குரு சோமசுந்தரம்..!

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் நடிகர் குருசோமசுந்தரம்.. சீனியர் நடிகராக இருந்தாலும் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் நம்பிக்கை நட்சத்திரமாக இடம்பிடித்தவர் நடிகர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

நாயகியாக இந்திய பாகிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார், மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ரம்மி’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்குகிறார்.