சிம்புவுக்கு ராதிகா அறிவுரை சொல்கிறாரா..? தூண்டி விடுகிறாரா..?

simbu-radhika

இரண்டு தினங்களுக்கு முன் சிம்பு, நடிகர் சங்கத்தில் இருந்து தான் விலகப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.. அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த கருத்து அவ்வளவாக பரபரப்பை ஏற்படுத்தவில்லை.. சொல்லப்போனால் தனது பக்கம் திரையுலகை திரும்பி பார்க்கவைக்க அவர் அடிக்கும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் இது என்றுகூட சொல்லப்பட்டது.. இந்தநிலையில் இதுபற்றி ராதிகா டிவிட்டரில் கருத்து கூறியிருந்தார்.

ராதிகா சொன்னது இதுதான்.. “இது சீனியர் நடிகராக எனது அறிவுரை.. நடிகர் சங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம்.. என் தந்தை, குடும்பத்தார், மற்றும் உங்கள் தந்தை என அனைவரின் விலைமதிப்பில்லா பங்களிப்பும் இந்த சங்கத்தில் இருக்கிறது. உள்ளிருந்து போராடுங்கள்.. இது அவர்கள் சொத்தல்ல, இது நமது சங்கம்… அவர்கள் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். ஆனால் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். பரீசிலனை செய்யுங்கள்.. விட்டுக்கொடுக்காதீர்கள் சிம்பு” எனக் கூறியுள்ளார் ராதிகா”.

ஆனால் சிம்புவுக்கு அறிவுரை கூறுவது போல ராதிகா வெளியிட்டிருந்த கருத்து அவரை மேலும் தூண்டிவிடுவது போலத்தான் இருக்கிறது என்கிறார்கள் திரையுலகில் உள்ள பலரும்… இந்தநிலையில் இதுகுறித்து நடிகர்சங்க தலைவர் நாசரிடம் கேட்கப்பட்டபோது, “இதுகுறித்து சிம்பு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அவரை அழைத்து பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்க்க முயற்சி செய்வோம்” என கூறியுள்ளார்.