சிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த நயன்தாரா-ராதிகா

sk 13 (1)

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப்படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, “சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்” என்கிறார்..