பந்தயம் வைத்து சண்டை போடும் கிருஷ்ணாவுக்கு சிக்கல்..!

சமந்தா வந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் தான். பின்னே ‘பண்டிகை’ படத்திற்கு சம்பந்தமே இல்லாத சமந்தா, அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முன்வந்தது  ஆச்சர்யம் இல்லாமல் என்னவாம்..? இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது வருங்கால கணவர் பெரோஸ் இயக்கிவரும் ‘பண்டிகை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்தப்படத்தின் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார். அனாதையான ஒருவன், நிழல் உலகில் நடைபெறும் இல்லீகல் குத்துச் சண்டையில் கலந்துகொண்டு எப்படி பணம் சம்பாதிக்கிறான், பின்னர் அதனாலேயே எப்படி சிக்கலில் சிக்குகிறான் என்பதுதான் ‘பண்டிகை’யின் கதை. கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, பருத்திவீரன் சரவணன், கருணாஸ், நிதின் சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.