தீபாவளிக்கு தில்லாக வரும் பில்லா பாண்டி..!

Billa Pandi Movie Stills (11)

தயாரிப்பாளராக இருந்து வில்லன் நடிகராக மாறி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் தான் பில்லா பாண்டி’. இதில் ஆர்,கே. சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.

மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன் ஆகியோர் நடிக்க, சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி படம் தீபாவளி அன்று திரைக்குவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் கூறினார்.

அணைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே “தல” இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர்.