ரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது

queen s first look 1

கடந்த 2014ல் இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் ‘குயீன்’. கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது.

தமிழில் காஜல் நடிக்க ‘பாரிஸ் பாரிஸ்’, கன்னடத்தில் பாருல் யாதவ் நடிக்க ‘பட்டர்பிளை’ என்கிற பெயரில் இரண்டு மொழிகளிலுமே ரீமேக் செய்து இயக்கியுள்ளார் ரமேஷ் அரவிந்த். தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்கிற பெயரில் பிரசாந்த் வர்மா இதை ரீமேக் செய்து இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் மலையாள ரீமேக்கிற்கு ஜம் ஜம் என டைட்டில் வைத்துள்ளார்கள். நீலகண்டா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் குயீனாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

இந்த நான்கு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இன்று வெளியாகியுள்ளது