ஆறு நாடுகளில் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணி.. ; ஆகஸ்ட்-2ல் ஆடியோ ரிலீஸ்..!

புலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஆறு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரலாற்று கதை சம்பந்தப்பட்ட படம் என்பதால் அதன் காட்சிகளில் ஒரு சிறு குறைகூட வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிராபிக்ஸ் பணிகளை கமலக்கண்ணன் என்பவரிடம் ஒப்படைத்தார்கள்..

ராஜமவுலியின் ‘மகதீரா’, ‘நான் ஈ’ படங்களுக்கு இவர் தான் கிராபிக்ஸ் பண்ணியவர்.. பட ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஆறு நாடுகளில் பிரித்து அனுப்பி வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார் இந்த கமலக்கண்ணன்.

படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட்-2ஆம் தேதி ஞாயிறன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்து பிரமாண்டமாக நடத்த உள்ளார்கள்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள கமல், சிரஞ்சீவி, மகேஷ்பாபு மற்றும் வட இந்திய நடிகர்கள் சிலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம்.

இந்த விழா குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் – ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நட்டி, கலை இயக்குநர் முத்தையா. கிராஃபிக்ஸ் கமலகண்ணன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.