தமிழகத்து ‘டைசன்’ ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்..!

tyson

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிவிட்டார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் கூட ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய்’ போன்ற பல படங்களில் நாயகனாக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ் இப்போது ‘டைசன்’ என்கிற படத்தில் இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு’ என்கிற படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இந்தப்படத்தை இயக்குகிறார்.

பிரமாண்டபொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது .