டைட்டில் விவகாரம் ; சி.வி.குமார் பதில்..!

C-V-Kumar
‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி .இயக்கியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் டீஸரில் கடந்த சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டனர்,

இதில் தான் சர்ச்சை எழுந்தது. விஜய் என்பவர் இயக்கத்தில் ஏற்கனவே கககபோ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளதாகவும், காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கும் ‘க க க போ’ என பெயரிட்டு விளம்பரம் செய்வதால் இது தங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்ரும் மீடியாக்களுக்கு கடிதம் எழுதினார்.

இந்த சர்ச்சை குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். “காதலும் கடந்து போகும் படத்தில் இடம்பெற்றுள்ள ‘க க க போ’ என்ற பாடல் தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளது. எனவே ஹிட்டான அந்தப்பாடலை மேலும் புரமோட் செய்வதற்காக, காதலும் கடந்து போகும் விளம்பரங்களில் க க க போ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளோம்” என்கிறார் சி.வி.குமார்

அதுமட்டுமல்ல் “இந்தப்படம் வெளியாகி ‘க க க போ’ பாடல் மேலும் ரீச்சானால், அது எங்கள் படத்துக்கு எந்தளவுக்கு நன்மையோ அதே அளவுக்கு க க க போ படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்கும். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என கூறியுள்ள சிவகுமார் இதுபற்றி ஏற்கனவே அந்த இயக்குனரிடமும் விளக்கம் அளித்திருந்தாராம்..