‘சதுரங்க வேட்டை’ ஹீரோயின் மீது தயாரிப்பாளர் புகார்..!

ishara
ஹீரோயின் தன்னோட பப்ளிசிட்டிக்காக பண்றாங்களா, இல்ல தயாரிப்பாளர் படத்தோட பப்ளிசிட்டிக்கா பண்றாங்களான்னே தெரியல.. ஆனால் விஷயம் இதுதான் ‘சதுரங்க வேட்டை’ கதாநாயகி இஷாரா தலைமறைவு’.. இவர் இப்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இல்லையில்லை நடித்து வந்தார்

இந்த நிலையில் தான் இஷாரா தலைமறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளனர். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு இரண்டே நாட்கள் தான் நடித்தாராம் ஆனால் அதற்கு பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினாராம்.

தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னாராம். இப்போது மலையாள நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்களாம். அதேசமயம் அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை என அவரது நல்ல பக்கத்தையும் மறைக்காமல் சொல்லியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். ஜோசப்.