“நாயகன்-நாயகி இணைந்த ஒரு காட்சி கூடவா இல்லை” ; அதிசயிக்க வைக்கும் மிக மிக அவசரம்..!

Miga Miga Avasaram movie 1

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் இவர்கள் கதாநாயகன், கதாநாயகி என்றாலும் ஒரு காட்சியில் கூட காம்பினேஷன் கிடையாது எனும் விதமாக அற்புதமான திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்தது நமக்கெல்லாம் தெரியும். இந்தநிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் படத்தை உலகம் முழுக்க வெளியிட இருக்கிறது.​

இந்த கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி.சத்தியமூர்த்தி தான் தற்போது ‘கோலிசோடா-2’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.