ப்ரியாமணி ஜட்ஜ் ஆனது காலத்தின் கட்டாயம்..!


ப்ரியாமணிக்கு தமிழ்சினிமாவில் தான் படவாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படத்திலும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவும் தவிர ஏதாவது ஒரு படத்திலாவது வில்லியாக நடித்துவிடவேண்டும் என்றும் அதற்கான கதையையும் தேடிக்கொண்டு இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் ப்ரியாமணியை தேடி மலையாள சேனல் ஒன்றில் ‘டி ஃபார் டான்ஸ்’ என்கிற ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக வாய்ப்பு தேடிவர அதை மறுக்கும் சூழ்நிலையில் ப்ரியாமணி இல்லை. அதுவும் தவிர தனது தாய்மொழியிலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்சியுடனே ஏற்றுக்கொண்டிருக்கிறார் ப்ரியாமணி.