அப்போ காதல் மன்னன்..! இப்போ காவல் மன்னன்..!

 

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார் விவேக் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் காமெடி ஏரியாவில் கலக்கிய விவேக் 13 வருடம் கழித்து அவருடன் இணைந்துள்ளதும், அதேபோல 2007ல் ‘கிரீடம்’ படத்தில் அஜித்துடன் நடித்த விவேக் 7 வருடம் கழித்து மீண்டும் இப்போது தான் அவருடன் இணைகிறார் என்பதும் காலம் நிகழ்த்தி காட்டிய அதிசயம். .

சரி இத்தனை வருடங்களில் அஜித் எப்படி என்று கேட்டால், அப்போது துடிப்பான ‘காதல்’ மன்னன்.. இப்போது பொறுப்பான ‘காவல்’ மன்னன் என அவர் பாணியில் பஞ்ச் வைக்கிறார். இந்தப்படத்தை பற்றி கேட்டால் ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால், என் கேரியரில் இது முக்கியமான படமாய் இருக்கும் என்கிறார் விவேக்.