பிரேம்ஜி லவ் பண்றாரு தெரியுமா..?

நடிக்கும் படங்களில் எல்லாம் அழகான பொண்ணுகளை பிக்கப் பண்ண அலைவதும்(படத்தில் தான்) பின்னர் அவர்களை ஹீரோ தட்டிக்கொண்டு போய்விட பின்னணியில் 80களின் இளையராஜாவின் சோககீதம் ஒலிக்க சோகமே வடிவாக வரும் பிரேம்ஜியைத்தான் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் பிரேம்ஜி உண்மையிலேயே ஒரு பொண்ணை லவ் பண்றாருங்கிற விஷயம் உங்களுக்கு புதுசாகத்தான் இருக்கும். ஒரு பேட்டியின்போது கல்யாணத்தை பற்றி பேச்சுவர, அப்ப்போதுதான், தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக விரும்புவதாக குறிப்பிட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பொண்ணுக்கு இவர் லவ் பண்ணும் விஷயம் இன்னும் தெரியாதாம். தற்போது இவர் தனது நண்பன் விஜய் வசந்த்தின் நட்புக்காக இசையமைத்திருக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தில் இடம் பெறும் ‘ஒரக் கண்ண’ என்ற பாடலைக்கூட அந்த பெண்ணை நினைத்துத்தான் கம்போஸ் செய்தாராம்.

அந்தப்பாடலையும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமே போட்டும் காட்டியிருக்கிறார். ஆனால் இதில் உள்ளடங்கிய விவரம் தெரியாமல் அந்தப்பெண்ணும் வழக்கம்போல பாடல் நன்றாக இருக்கிறது என பாராட்டிவிட்டு போய்விட்டாராம். விரைவில் தன் காதல் அந்தப் பெண்ணுக்கு புரியும் என்கிறார் பிரேம்ஜி நம்பிக்கையாக.

நாங்கள் சொல்வதை விட பிரேம்ஜி வாயாலேயே அந்த விஷயத்தை கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்ளுங்களேன்.
http://www.behindframes.com/premji-love-life-leaked-interview/