டிச-14 ரேஸில் இடம்பிடித்த பிரசாந்தின் ‘ஜானி’..!

johnny

சாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படத்தின் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் உள்ளனர். மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப்படத்தை வரும் டிச-14ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்..