சாகசம் படத்திற்காக பிரசாந்தின் புதிய ஆராய்ச்சி..!

 

பிரசாந்த் நடித்துவரும் சாகசம் படத்தை எடு..எடு..எடு என நீண்ட நாட்களாக, பார்த்து பார்த்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்தவகையில் இப்போது பிரசாந்தும் கதாநாயகி அமெண்டாவும் இணைந்து பாடுகின்ற  புதிய பாடல் ஒன்றை கபிலன் வரிகளில், தமன் இசையில் நடன இயக்குனர் பாபா பாஸ்கரை வைத்து படமாக்கியுள்ளனர்.

“பட்டுசேலை வாங்கி தந்தா பொம்பளைக்கு பிடிக்கும்.. அத கட்டச்சொல்லி கைல தந்தா ஆம்பளைக்கு பிடிக்கும்” என பிரசாந்தின் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் இந்தப்பாடல் மூலம் வெளிப்பட்டுள்ளது. அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப்படத்திற்கு தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.