“உலகமே திரும்பிப் பார்க்கிற படம் சில சமயங்களில்” ; பிரகாஷ்ராஜ் பெருமிதம்.!

sila-samayangalil

காஞ்சிவரம் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் மீண்டும் நடித்துள்ள படம் தான் ‘சில சமயங்களில்’ பிரபுதேவா ஸ்டுடியோஸ், திங்க் பிக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயை மையப்படுத்தியா கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பிரியதர்ஷன், ஏ.எல்.விஜய், பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய பிரகாஷ்ராஜ் ரொம்பவே நெகிழ்வாக படத்தை பற்றி பேசினார். “உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு தமிழ் மண்ணுல உருவாகியிருக்கும் ஒரு படம் சில சமயங்களில். நான் பல மொழிகளிலும் 300க்கு மேல படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா ஒரு காஞ்சிவரம், இருவர், சில சமயங்களில் மாதிரி நடிக்கவில்லை.

சினிமாவில் நடிக்கும்போது பெயர், புகழ், பணம் எல்லாம் வரும். ஆனால் ஒரு சிலர்களால்தான் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு பெருமையை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் அதுதான் இந்த ‘சில சமயங்களில்’ படம். காஞ்சிவரம் படம் பண்ணும் போது இப்படியொரு கதை இருக்கு. நீ நடிக்கிறேன்னு சொன்னா பண்றேன். இல்லேன்னா அந்த கதாபாத்திரத்திற்கான நடிகனை தேடிக்கிட்டே இருப்பேன் என்று சொல்லும்போது இந்த கதையை எப்படி இத்தனை வருசமாக வயிற்றுக்குள் வச்சிருந்தீங்கன்னு கேட்டு நடிச்சேன்.

இந்தப்படம் கோல்டன் குளோப் என்ற இன்டர்நேசனல் பெஸ்டிவ’லில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கிறது. இதன்பிறகு ஆஸ்கருக்கு ஈஸியாக போயிடலாம். அதுக்கான தகுதி தான் இது. ஏனென்றால் உலகத்தில் அந்த ஒரு மேடையில அங்கிருந்து திரும்பிப்பார்க்கும்போது தமிழ் சினிமாவை பார்க்க வைக்கிற ஒரு படமாக இது அமைந்திருக்கு. தமிழ் சினிமாவோ, தமிழ் மக்களோ, தமிழ் திரையுலகமோ, எனக்கும், பிரியதர்ஷனுக்கும் இது பெருமைப்படுற ஒரு விசயம்” என கூறினார் பிரியதர்ஷன்