ஆச்சர்யம் ; ஹாரர் படமான ‘தேவி’க்கு ‘U’ சான்றிதழ்..!

devi-28
பொதுவாக பேய்ப்படங்கள் என்றாலே சென்சார் சான்றிதழ் எப்போதும் நெகடிவாகத்தான் இருக்கும்.. ‘U/A’ கிடைத்தாலாவது பரவாயில்லை.. ஆனால் ஹாரர் படங்கள் எடுத்த பலரும் ‘A’ சான்றிதழையே பரிசாக பெற்றுள்ளார்கள்.. காரணம் அப்படிப்பட்ட படங்களில் இடம்பெறும் காட்சிகளின் தன்மையால் ‘U’ சான்றிதழ் கிடைப்பது கடினம் தான்..

ஆனால் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் ஒரு காட்சியை கூட வெட்டச்சொல்லாதததுடன் படத்திற்கு அனைவரும் பார்க்கும் விதமாக ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பொதுவாக ஏ.எல்.விஜய்யின் படங்கள் அனைத்துமே குடும்பத்துடன் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும்.. தற்போது அவர் ஹாரர் படமாக இயக்கியிருந்தாலும் தனது பாதையில் இருந்து விலகாமல் தன்மேல் உள்ள நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார் ஏ.எல்.விஜய். வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.