பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2ஆம் பாகம் உருவாகிறது..!

prabudeva

2002ல் பிரபுதேவா-பிரபு இருவரும் இணைந்து நடித்த படம் சார்லி சாப்ளின்.. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் அபிராமி, காயத்ரி ரகுராம், மோனல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது..

முதல் பாகத்தைப்போல இருவர் நடிக்காமல், பிரபுதேவா ஒருவரே இரண்டு கேரக்டர்களிலும் நடிக்க இருக்கிறாராம். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் நடிப்பார்கள் என தெரிகிறது. நீண்ட நாளைக்குப்பிறகு கிரேசி மோகன் இந்தப்படத்தின் மூலம் வசனம் எழுதும் பணிக்கு திரும்பவுள்ளராம்.