“நான் ஐடியா கொடுக்காமல் ஒதுங்கியது ஏன்” ; பிரபுதேவா..!

devi-28

இயக்குனராக மாறிவிட்ட பிரபுதேவாவை வெள்ளித்திரையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கதாநாயகனாக மாற்றி இருக்கும் படம் தான் ‘தேவி’.. மும்மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படஹ்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.. ஹாரர் கலந்த காமெடியுடன் உருவாக்கி இருக்கும் இந்தப்படம் வரும் அக்-7ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படதில் நடித்தபோது இயக்குனரான பிரபுதேவா கதையில் தலையிட்டாரா என்ன..?

“இந்த படத்தில் முதன் முதலாக நடிக்கும்போது நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. முதலில் இயக்குனர் விஜய், தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் காலையில் எழுந்தவுடன் எந்த ஐடியாவும் கொடுக்காமல், படக்குழுவினர் சொல்வதை மட்டும் செய்துவிட்டு போக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவேன். நான் ஏதாவது ஐடியா கொடுத்து அது வேறமாதிரி ஆகி அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று நினைத்தேன்” என்கிறார் பிரபுதேவா..