5 மணி நேரம் பிரபுதேவாவை நடக்கவிடாமல் செய்த ‘தேவி’..!

devi-1

டைரக்சனில் பிஸியானபின் பிரபுதேவா நடிப்பு பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை.. அப்படியும் ஆசைப்பட்டு நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படம் இன்னும் ரசிகர்களின் பார்வைக்கு வராமலேயே இருக்கிறது.. அதனால் டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்திய பிரபுதேவா, இந்தியில் உருவான ‘ஏபிசிடி’ படத்தின் பாகங்களில் ஜஸ்ட் லைக் தட் கொஞ்ச நேரம் மட்டுமே வந்து செல்லும் கேரக்டர்களில் நடித்தார்..

ஆனால் மீண்டும் ஒரு முழுநீள கமர்ஷியல் படத்தின் நாயகனாக அவரை ரசிகர்கள் முன் கொண்டுவந்து நிறுத்த உள்ளது வரும் அக்-7ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தேவி’.. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது இந்தப்படம்.

பிரபுதேவாவின் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதே முக்கியமாக அவரது நடனத்திற்காகத்தான்.. இந்தப்படத்தில் நடனம் உண்டு என்றாலும் அவை எதுவும் பிரபுதேவாவுக்காக வலிந்து திணிக்கப்படவில்லையாம்.. அப்படி ஒரு பாடல் காட்சியின்போது திடீரென பிரபுதேவாவால் கால்களை அசைக்க முடியாமல் போயிற்றாம்..

கிட்டத்தட்ட பக்கவாதம் மாதிரி.. டான்ஸ் ஆடுவது இருக்கட்டும்.. இனிமேல் தன்னால் நடக்கவே முடியாதோ என்கிற பயங்கரமான எண்ணங்கள் எல்லாம் பிரபுதேவாவுக்கு வந்து பயம் காட்டினவாம்.. ஆனால் தசையில் ஏற்பட்டிருந்த பிடிப்பு ஐந்து மணி நேரங்களில் சரியாகிவிட, பிரபுதேவாவின் பயமும் விலகியதாம்..