‘சார்லி சாப்ளின்-2’ ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடினார் பிரபு..!

prabhu birthday

நடிகர் திலகத்தின் மகனாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தாலும், தனக்கென நடிப்பில் தனி பாணியை உருவாக்கி முன்னணி ஹீரோவாக மாறியவர் இளைய திலகம் பிரபு.. பல வருடங்கள் கதாநாயகனாக கோலோச்சிய பிரபு, இன்று மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக, தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத நபராக விளங்குகிறார்..

கோபப்படாத, எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சி தருகின்ற, திரையுலகில் அனைவருடனும் நல்ல நட்பை கொண்டிருக்கின்ற பிரபு, எப்போதும் பாஸிடிவ் எனர்ஜியை மட்டுமே மற்றவர்களுக்கு கடத்துபவர்.. இன்று அவரது மகன் விக்ரம் பிரபு இளம் முன்னணி நடிகராக தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றி வருகிறார்.

தற்போது ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் நடித்துவரும் பிரபு படப்பிடிப்பில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. இந்த நிகழ்வில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்