கேரளாவுக்கு பிரபு-ஏ.ஆர்.முருகதாஸ் தலா 10 லட்சம் நிதியுதவி..!

கேரளாவில் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும், பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். சூர்யா-கார்த்தி 25 லட்சம், ரஜினி 15 லட்சம், விக்ரம் 35 லட்சம், தனுஷ் 10 லட்சம், ஜெயம் ரவி 10 லட்சம் என பலரும் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது தவிர இயக்குனர் A.R முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.