மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் புதிய படம்..!

prabas 19

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பாகுபலி’ படம் மூலம் ஆந்திராவில் இருந்து அப்படியே தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல், பாலிவுட்டையும் அதிரவைத்தவர் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வெளிவரவுள்ளது..

இந்நிலையில் இந்தப்படத்திற்காக சுமார் நான்கு வருடங்களுக்கு மேல் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பிரபாஸ் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமர்ஷியல் சினிமா உலகிற்கு திரும்பியிருக்கிறார்.. ஆம்.. பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது அதை உறுதி செய்கிறது.

சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மற்றும் இந்தி என மும்மொழிகளில் உருவாகவுள்ளது.. இது பிரபாஸின் 19வது படமாகும்.. ‘ரன் ராஜா ரன்’ என்கிற படத்தை இயக்கிய சுஜித் இந்தப்படத்தை இயக்குகிறார்.