இப்போதே 350 கோடி வியாபார பேரத்தில் பிரபாஸின் ‘சாஹோ’..!

prabhas 4

பாகுபலி படத்தால் இந்திய சினிமாவின் அந்தஸ்து உலக அரங்கில் இன்னும் பலபடி உயர்ந்துள்ளது போலவே இந்தப்படத்தின் நாயகன் பிரபாசுக்கான மார்க்கெட் எல்லையும் அதிகரித்துள்ளது. 1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான பாகுபிலியில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் தற்போது சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன. இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈன்ற போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.