பரத்துக்கு ‘பொட்டு’ வைத்து பூஜை போட்டார் வடிவுடையான்..!

pottu 1
தனது இரண்டாவது படமான ‘கன்னியும் காளையும் செம காதல்’ இன்னும் வெளிவராத நிலையில், தனது மூன்றாவது படமான ‘சவுகார்பேட்டை’ படத்தை வரும் பிப்-12ல் ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து இன்று பூஜையுடன் படத்தை ஆரம்பித்துள்ளார்.

இதில் கதாநாயகனாக நடிக்கிறார் பரத். ‘சவுகார்பேட்டை’ படத்தில் ஸ்ரீகாந்தை பேயாக மாற்றியதுபோல் இந்தப்படத்தில் பரத்தையும் பேயாக மாற்றியுள்ளாராம் இயக்குனர் வடிவுடையான். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே பரத்தின் வேடத்தை நன்கு தெரிந்துகொள்ளலாம். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.