‘போஸ்டரை ‘க்ளிக்’ பண்ணினா பாட்டு கேக்கலாம்’ – ஆர்.கேவின் அதிரடி அறிமுகம்..!

 

மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ்.. இங்கே தமிழில் விஜயகாந்த், அஜித் ஆகியோரை வைத்தும் படங்களை இயக்கியவர். ‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் நடிகராக ஆர்.கே அறிமுகமானது எல்லாம் இவர் செயலால் தான்.

அதே ஷாஜிகைலாஷ் – ஆர்.கே கூட்டணி மீண்டும் ‘என் வழி தனி வழி’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து முழுப்படத்தை எடுத்தும் முடித்துவிட்டார்கள். இந்தப்படத்தின் இசைத்தகட்டை நடிகர் விஜய் வெளியிட்டார்.

இந்தப்படத்தில் புதிய ஒரு முயற்சியாக ‘என் வழி தனி வழி’ போஸ்டர் டிசைனை உங்கள் மொபைல் கேமரா மூலம் க்ளிக் செய்தாலே போதும், நீங்கள் யூடியூப் எல்லாம் போகாமலேயே பாடல்களையும் ட்ரெய்லரையும் பார்க்க, கேட்க முடியும்.. இந்திய சினிமாவிலேயே ஆர்.கே தான் இந்த சிஸ்டத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறார்.

கதாநாயகியாக பூனம் கவுர் நடிக்கிறார். ஆர்.கேவின் முதல் படத்தைப்போலவே இதிலும்  ஆசிஷ் வித்யார்த்தி, ராதாரவி, தம்பி ராமையா, தலைவாசல் விஜய், ரோஜா, சீதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். படத்தை வரும் ஜனவரி-23ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஆர்.கே.