‘பொன் மாணிக்கவேல்’ ; பிரபுதேவாவுக்கு கிடைத்த கம்பீர டைட்டில்

pon manickavel title

காக்கி யோனிப்பாரம் அணிந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசைக்கு பிரபுதேவா மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்திற்கு தற்போது ‘பொன் மாணிக்கவேல் ‘ என கம்பீரமான டைட்டில் வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..

தமிழ்நாட்டின் மிகசிறந்த, நேர்மையான போலீஸ் அதிகாரிகளில் ஒருவரும், பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படும் போலீஸ் அதிகாரியான பொன் மாணிக்கவேல் பற்றி ரசிகர்களுக்கு நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒருவரின் பெயர் கொண்ட ஒரு டைட்டில் பிரபுதேவாவுக்கு கிடைத்திருப்பது நிச்சயம் அதிர்ஷ்டம் தான்.

பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ சி முகில் செல்லப்பன். இவர் பிரபுதேவாவின் உதவியாளர்என்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும் ’என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில்.