முடிவுக்கு வந்தது ‘போக்கிரி ராஜா’ ரிலீஸ் பிரச்சனை..!

pokkiri raja
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரியும். காரணம் இந்தப்படத்தை தயாரித்துள்ள பி.டி.செல்வகுமார் ஏகனவே விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை தயாரித்து வெளியிட்டபோது

அதன் நட்டத்தால் பாதிக்கப்பட்ட போல விநியோகஸ்தர்கள் தங்களுக்கு இந்தப்படத்தின் ரிலீஸ் மூலம் இழப்பீடு தரவேண்டும் என எதிர்ப்பு காட்டினார்கள்.. இப்போது ஒருவழியாக அனைத்து தரப்பினரும அமர்ந்து பேசி போக்கிரிராஜா’வின் சிக்கலை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர். படம் திட்டமிட்டபடி வரும் வெள்ளி அன்று 400 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்ததில் டி.ராஜேந்தரின் பங்கும் முக்கியமானது.

“தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர் எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது எனக்கு உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம்” என கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.