பிச்சைக்காரனாக மீண்டும் ஆக்சனுக்கு திரும்பிய விஜய் ஆண்டனி..!

காமெடி சப்ஜெக்ட்டை விட ஆக்சன் தான் தனக்கு கைகொடுக்கிறது என்பதை விஜய் ஆண்டனி நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார். அவர் தற்போது நடித்துவரும் படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என பெயர் வைத்தாலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்சனில் அனல் தெறிக்கிறது.

‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ படங்களில் மென்மையையும் ‘555’ படத்தில் ஆக்சனையும் கொடுத்த இயக்குனர் சசி, இந்தப்படத்தில் ஆக்சன் ரூட்டிலேயே ட்ராவல் பண்ணியிருக்கிறார். சசியின் ‘டிஷ்யூம்’ படத்திற்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, கடந்த வருடம் ஏதேச்சையாக சசியை சந்தித்தபோது தனக்கு ஏதாவாது கதை வைத்துள்ளீர்களா என கேட்டிருக்கிறார்.

அப்போது விஜய் ஆண்டனியிடம் மூன்று மணி நேரம் சசி சொன்ன கதைதான் இப்போது ‘பிச்சைக்காரன்’ படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் சட்னா டைட்டாஸ். இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.