டிச-28ல் ‘பேட்ட’ ட்ரெய்லர் வெளியீடு

petta triler

இளம் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் வரை படப்பிடிப்பு புகைப்படங்கள் படத்தின் போஸ்டர்கள் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டு அவ்வப்போது ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புகைப்படங்கள், பாடல்கள். டீஸர் என அவ்வப்போது ஏதாவது ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது