பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

பிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் இறந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சென்னையில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அப்பா, அம்மா இறந்து விட்டதால் அந்த வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார் பிரேம்.

ஆனால் அங்கு வசிக்கும் நான்கு பேய்யகள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. அதில் ஒரு பேய்தான் தமன்னா. வீடு வாங்க வரும் அனைவரையும் தமன்னா உட்பட நான்கு பேய்களும் மிரட்டி பயமுறுத்துகின்றன. அதனால் வீட்டை வாங்க யாரும் முன்வரவில்லை. பிரேமின் வீடு விற்கும் முயற்சி தடைபடுகிறது.

இந்நிலையில் வீட்டை விற்றுத் தர முனீஸ்காந்த் முன்வருகிறார். அவர் பார் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். அவரச பணத் தேவை உள்ள மூன்று பேரை தன்னுடன் சேர்த்து கொள்கிறார். அந்த மூவர் காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணக்குமார் ஆவர்.

இவர்கள் நால்வரும் இணைந்து அந்த வீட்டில் தங்கி அங்கு பேய் இல்லை என் நிரூபித்து வீட்டை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகின்றனர். நால்வரும் வீட்டிற்குள் சென்று சில நாட்கள் தங்குகின்றனர்.

அதன் பின்னர் முனீஸ்காந்த் உட்பட நால்வருக்கும் என்ன ஆனது? அந்த வீட்டில் உள்ள தமன்னா உட்பட நான்கு பேய்களும் யார்? பிரேமின் பெற்றோர்களுக்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க நகைச்சுவை. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. அதிலும் இடைவேளைக்கு பின் ரசிகர்களின் சிரிப்பொலி அடங்கவே இல்லை.

பேயாக வந்தாலும் காட்சிகளில் தமன்னா மிக அழகாக தெரிகிறார். முனீஸ்காந்த் நடிப்பு மிக அற்புதம். குறிப்பாக அந்த நெஞ்சு வலிக்கும் காட்சியில் ஏற்படும் பயம் காரணமாக அவர் சிரிக்கும் காட்சிகள் மிக சிறப்பு. அவருடன் இணைந்து சத்யன், காளி வெங்கட், திருச்சி சரவணக்குமார் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். யோகி பாபுவும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

தெலுங்கு டப்பிங் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளனர். இயக்குநர் ரோஹின் வெங்கடேசனை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

ஜிப்ரானின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்குப் பின் ரசிர்களை சிரிப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது இந்த பெட்ரோமாக்ஸ்.

மொத்தத்தில் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்கிறது.