வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் விருதுநகரில் நடைபெற்று வருகிறது. இதில் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ‘அசுரன்’ திரைப்படத்தில் இணைத்துள்ளார்.
ஏற்கனவே புலிமுருகன் படத்தில் மிரட்டலான சண்டைகாட்சிகளை அமைத்து தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான ஒடியன் படத்தில் கூட பிரமிக்கவைக்கும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார். அதுமட்டுமல்ல பேட்ட படத்திலும் பட்டையை கிளப்பியிருந்தார் பீட்டர் ஹெய்ன். தற்போது மம்முட்டி நடித்து வரும் மதுர ராஜா படத்திற்கும் இவர் தான் சண்டை பயிற்சியாளர்.
தற்போது இவர் அசுரன் படத்தில் இணைந்தது குறித்து படக்குழுவினர் கூறியதாவது “இந்த படத்தின் சண்டை காட்சிகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்” என்று தெரிவித்தனர். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.