அக்-17ல் ‘பசங்க-2’ ஆடியோ ரிலீஸ்..!

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் பாண்டிராஜின் படம் என சொல்வதா குறுகிய காலத்தில் ரிலீஸாகும் சூர்யாவின் அடுத்த படம் என சொல்வதா என்கிற குழப்பம் எல்லாம் தராமல், குழந்தைகளுக்காகவே உருவாகி இருக்கும் பெரியவர்களுக்கான படம் தான் இந்த ‘பசங்க-2’ (ஹைக்கூ). சூர்யாவின் மனைவியாக அமலாபால் நடிக்க, மற்றும் இரண்டு கதாநாயகிகளாக பிந்து மாதவி, வித்யா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்கள் கார்த்திக் மற்றும் ‘முனிஷ்காந்த்’ ராமதாஸ் நடிக்கிறார்கள்.

பிசாசு படத்திற்கு இசையமைத்த அரோல் குரோலி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீடு வரும் அக்-17ல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு ட்ரெய்லரும் யூடியூப்பில் வெளியாகிவிடும். சூர்யாவின் 2டி நிறுவனம், பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் மற்றும் ஸ்டுடியோகிரீன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.