பருத்தி வீரனும் கார்த்தியின் பத்து வருட பயணமும் …

paruthi veeran
சரியாக பத்து வருடத்துக்கு முன்பு இதே நாளில் தான் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே கொண்டாடும் வகையிலான ‘பருத்தி வீரன்’ என்கிற படமும் சகல அம்சங்களும் பொருந்திய கார்த்தி என்கிற நடிகனும் நமக்கு கிடைத்தார்கள். கூடவே அதுவரை சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த பிரியாமணியின் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் கிடைத்தது. படத்தொகுப்பாளர் ராஜா முகமதுவும் தேசிய விருது பெற்றார்.

ஒரு அறிமுக ஹீரோவுக்கு, அதிலும் வாரிசு நடிகருக்கு, இன்னும் குறிப்பாக, தனக்கு முன்னே இறங்கிய அண்ணன் களத்தில் தன்னை நிரூபித்துவிட்ட நிலையில், அடுத்ததாக களம் இறங்கும் தம்பிக்கு முதல் வாய்ப்பு என்பது அக்னி பரீட்சை போலத்தான்.. ஆனால் அதில் இயக்குனர் அமீரின் உதவியுடன் அழகாக தேர்வெழுதி முதல் மாணவனாக ஜெயித்துவந்தார் கார்த்தி..

இன்று அவர் கண்டுவரும் ஏற்றங்கள் அனைத்திற்கும் அடித்தளம் இட்டுத்தந்தது இந்த பருத்தி வீரன் தான்.. இந்த தருணத்தில் தன்னை இந்த உயரத்திற்கு கொண்டுவந்து வைத்த இயக்குனர்கள், தயாரிப்பாளார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் கார்த்தி நெகிழ்ந்த மனதுடன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.