சன் டிவி கைகளில் பார்ட்டி சாட்டிலைட் ரைட்ஸ்

Party-Tamil-Movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. கேங்ஸ்டர் காமெடிப் படமான இதில் ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா, நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் பிஜி தீவில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.