பார்த்திபனுக்காக பைக்கில் வந்தார் விஜய்சேதுபதி..!

சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றால் பிரபல நடிகர்கள் சிலர் கெஸ்ட் ரோலில் நடிப்பது வழக்கமான ஒன்றுதானே.. அப்படித்தான் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஆர்யா, அமலா பால் நடிக்கிறார்கள்.. அதேபோல பிரகாஷ்ராஜும், நஸ்ரியாவும் கூட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்த செய்திதான்..

விஜய்சேதுபதியும் ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்தப்படத்திற்குள் விஜய்சேதுபதி நுழைந்த விதம் குறித்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தனது முகநூல் பக்கத்தில் பார்த்திபன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

“கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்ட மறுநாளே தளத்திற்கு வந்து நின்றார்.. ஸாரி.. உட்கார்ந்தார் விஜய்சேதுபதி. அதுவும் காரில் வந்தால் நேரம் ஆகிவிடுமென பைக்கில்! கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக்கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக்கொண்டது அவர் நட்பூ!”

இப்படி நயமாக பாராட்டுவதில் பார்த்திபனை அடிச்சுக்க ஆளில்லை..