‘திகார்’ இசைவெளியீட்டு விழாவில் பார்த்திபன் சபதம்..!

‘மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் பேரரசு. அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று முன் தினம் மிகவும் சிறப்பாக, அதே சமயம் வித்தியாசமான முறையில் நடத்தினார் இயக்குனர் பேரரசு.

அதாவது சிறை என்றாலே நமக்கு ஞாபத்துக்கு வரும் சுதந்திர போராட்டத்திர்காக சிறைசென்ற செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களது பேரன் சிதம்பரத்தையும் திகார் சிறை என்றாலே உடனே ஞாபகத்திற்கு வரும் கிரண்பேடி ஐ.பி.எஸ்ஸையும் இந்த விழாவிற்கு அழைத்து வந்து இசைத் தகட்டை வெளியிட வைத்தார்.

இந்தப்படத்தில் டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இன்னொருநாயகனாக  மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான், தேவன், ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

இந்த விழாவில் பேசிய கிரண்பேடி ஐ.பி.எஸ், தான் திஹார் சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூலை சில மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழில் இதுவரை மொழிபெயர்க்கவில்லை.. அதை யாராவது மொழிபெயர்த்தால் வரவேற்பேன் என கூறினார்.. அத்துடன் அந்த நூலை ஆய்வு செய்தால் அதில் சினிமாவுக்கான ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் கூறினார்.

உடனே நடிகர் பார்த்திபன், தான் கிரண்பேடியின் நூலை மொழிபெயர்க்க பொறுப்புஎடுத்துக்கொள்வதாகவும் 2௦15க்குள் அந்த நூலை கிரண்பேடியின் கையாலேயே வெளியிடுவதாகவும் சபதம் இட்டார்..அதுமட்டுமல்ல, கிரண்பேடி பேசிய பேச்சை தமிழில் விழா தொகுப்பாளர் மொழி பெயர்த்தார். இதுபாரி பார்த்திபன் பேசும்போது, கிரண்பேடியின் பேச்சை மொழி பெயர்ப்பது என்பது அதை அப்படியே தமிழில் சொல்வதை விட, அதை நாம் பின்பற்றுவதுதான் உண்மையான மொழிபெயர்ப்பாக இருக்கமுடியும் என்றும் கூறினார்.