தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு..!

parthiban

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் அடாவடியாக செயல்பட்டு தன்னிச்சையாக பூட்டுபோட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அதில் ஈடுபட்ட நபர்கள் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இதையடுத்து விஷால் கூறும்போது சங்கத்திற்கு பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது வீடியோவில் பதிவாகி உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

மேலும், “பொதுக்குழு தேதி என்னவென்று அடுத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும். ஜிஎஸ்டி குறைந்ததால் தியேட்டர் கட்டணங்கள் குறையும். அதனால் பொதுமக்கள் திரையரங்கை நோக்கி அதிக அளவில் வருவார்கள் என்று நம்புகிறோம் இளையராஜா இசை நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று என்பது குறித்தும் விவாதித்துள்ளோம் இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என தலைவர் விஷால் கூறியுள்ளார்