ரசிகர்களுக்கு பார்த்திபன் வைக்கும் கோரிக்கை..!

k-i-n
பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாளை மறுதினம் அதாவது ஜன-14ஆம் தேதி வெளிவருகிறது. விஜய்யின் ‘பைரவா’ படம் வெளியாகிற நேரத்தில் பார்த்திபன் இப்படி தன்னுடைய படத்தை எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார் என்கிற சந்தேகம் பலருக்கும் எழலாம்..

ஆனால் பார்த்திபன் இதுகுறித்து ரசிகர்கிடம் கோரிக்கை வைக்கும் விதமாக கூறியுள்ளதை படித்து பார்த்து பார்ப்போமா..?

பொங்கல் பண்டிகை என்பது இருப்பதை போட்டு இல்லாதவர்களுக்கு கொடுப்பது. அதாவது நம்மால் என்ன முடியுமோ அதனை போட்டு பொங்கல் வைத்து இல்லாதவர்களுடன் பகிர்ந்து உண்பது. நானும் என்னிடம் இருப்பதையெல்லாம் போட்டு (சொத்துக்களை விற்று) கோடிட்ட இடத்தை நிரப்பி இருக்கிறேன். பொங்கல் பரிசாக அதனை உங்களுக்கு பரிமாறுகிறேன். 12ஆம் தேதி பைரவா வருவதல் 14ஆம் தேதி கோட்டிட்ட இடங்கள் நிரப்புக வருகிறது. நான் எல்லோரையும் விட என்னையும் விட ரசிகர்களைத்தான் அதிகம் நம்புகிறேன். அவர்கள் கோடிட்ட இடங்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் பார்த்திபன்.