பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வரும் பார்த்திபன்…!

parthiban with celebrties

அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் அதிரடியாக கூறி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த நிலையில் ஆச்சர்யம் தரும் வகையில் திரையுலக பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் பார்த்திபன்..

சூப்பர்ஸ்டார் ரஜினியை தனது மகனுடன் சென்று சந்தித்துவந்துளார் பார்த்திபன்.. அதேநாளில் கமலையும் சந்தித்துள்ளார் பார்த்திபன்.. இந்த சந்திப்பு பற்றி பார்த்திபன் கூறியுள்ளதாவது ;

“இதுவரை சினிமாவில் காணா நட்புடன்

கமல்சாரையும் ரஜினிசாரையும் இவ்விரு தினங்களில் கண்டேன். தராசின் முள்

நடுநிலையில் நிற்கும் நிதானமும் மரியாதையும் சரிசமமாய் இருவரிடமும்.என் மகனுக்கு நான்

தனி விமானம் வாங்கிக்கொடுத்ததைப் போல

வானளாவிய மகிழ்ச்சியில் பறந்தார்” என குறிப்பிட்டுளார்..

அதேபோல கலையுலக மார்கண்டேயன் எனப்படும் நடிகர் சிவகுமாரையும் சந்தித்த பார்த்திபன்,

சிவனின் நெற்றிக்கண்ணாய்-உங்கள்

நெற்றிமேட்டில் ஒற்றைக்கண்ணாய்

திகழும் திருநீற்றின் தூய்மையை

மேன்மைப் படுத்துகிறது தங்களது

ஆழ்ந்த அறிவின் வெளி + அகத்தின் ஒளி” என நெகிழ்ந்துளார்.

இவர்கள் தவிர தனது மகள் கீர்த்தனாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் சந்தித்துள்ளார் பார்த்திபன்.