கிம்பல் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பரியேறும் பெருமாள்

pariyerum perumal

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது. இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் ‘கிம்பல்’ தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் சீடரான இவர் பிறந்து வளர்ந்தது சென்னைதான் என்பதால் கிராமத்து வாழ்க்கை பற்றி அதிகமாக பரிச்சயம் இல்லை. இவரது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ‘பரியேறும் பெருமாள்’ கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

அதனால் கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.. 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுத்துள்ளார்.

“கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும், எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரி செல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாக இருந்தது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம்” என்கிறார் உற்சாகமாக.