‘வந்தா மல’ படத்தில் ‘பராசக்தி’ ரீமிக்ஸ் பாடல்..!

இகோர் இயக்கியுள்ள, ‘வந்தா மல’ படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்புடைய இரண்டு விஷயங்களை தந்து படத்தில் பயன்படுத்தியுள்ளது. ஒன்று, நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய, பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இந்தப்படத்தில் பேட்டை தாதாவாக நடித்துள்ளார்.

இன்னொன்று நடிகர் திலகம் அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற உடுமலை நாராயண கவி எழுதிய, “தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி” என்கிற மிகவும் புகழ்பெற்ற பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். சாம் டி.ராஜ் என்னும் புதியவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.