நாசரின் மகனை முழுமையான ஹீரோவாக்கும் ‘பறந்து செல்ல வா’..!

parandhu_sellava-1

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. முழுக்க முழுக்க காதல், அதை சுற்றி வரும் காமெடி என பயணிக்கும் திரைக்கதை இது. மொத்த கதையும் சிங்கப்பூரில் நடப்பது மாதிரி என்பதால் சென்னை ஏர்போர்ட் தவிர படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இது என்ன மாயம்’, ‘சைவம்’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த லுத்ஃபுதீன் இந்தப்படத்தின் மூலம் முழுமையான கதாநாயகனாக மாறுவார் என எதிர்பார்க்கலாம்..

பத்மநாபன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. இந்தக்கதையை கேட்ட பாள ஹீரோக்கள் கதை நன்றாக இருக்கு என்று கூறிவிட்டு, இதில் நடிக்க மறுக்கவும் செய்தார்கள். காரணம் படம் முழுக்க ஹீரோ இருந்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பது படத்தின் கதாநாயகி அல்லது படத்தில் வரும் வேறு கேரக்டர்களாக தான் இருக்கும் என்பதால் கதையை கேட்ட ஹீரோக்களுக்கு இது பிடிக்கவில்லையாம். ஆனால் நாசரும் லுத்புதீனும் இந்தக்கதையை படித்துவிட்டு, நன்றாக இருக்கிறது, பண்ணலாம் என்று சொன்னார்கள். அப்படிதான் இந்த கதைக்குள் லுத்ஃபுதீன் வந்தாராம்.